என் - எனின், உயர்திணைத் தெரிநிலை வினை உணர்த்தி, அதன் வினைக்குறிப்பினுள் ஒன்றனை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.)யார் என்று சொல்லப்படுகின்ற வினாப்பொருளை உணர நின்ற சொல் மேற்சொல்லப்பட்ட உயர் திணையிடத்து முப்பாற்கும் உரித்து, (எ - று.) (எ - டு.) யார் அவன், யார் அவள், யார் அவர் எனவரும். மேல் வினைக்குறிப்புக் கூறுழிக் கூறுக எனின், ஆண்டுக் கூறுவன போலாது இஃது ஈறுதிரியாது தானொன்றே மூன்றுபாற்கும் உரித்தாயின மையின் வேறு கூறினார் எனக்கொள்க. (13) |