செய்யுட்கண் சில வினையீறுகள் ஓகாரமாதல்
 

214.

பாலறி மரபின் அம்மூ வீற்றும்
ஆவோ ஆகும் செய்யு ளுள்ளே.
 

என் - எனின்,   அவ்விருபத்து   மூன்று   ஈற்றுள்ளும் மூன்றற்குச்
செய்யுளகத்துப் பிறப்பதோர் திரிபு கூறுதல் நுதலிற்று.
  

(இ - ள்.)   பால்  அறியப்படும்   மரபினையுடை  அம்மூன்றீற்றின்
கண்ணும்  ஆகாரம்  ஓகாரமாம்  செய்யுளிடத்து,  (எ - று.)

அம்மூன்றாவன,  மேல்  ‘ஆ ஓ ஆகும்’ என்றமையால் ஆன், ஆள்,
ஆர் எனக் கொள்க.
  

(இ - ள்.) “வினவி  நிற்றந்தோனே”,  “நல்லை  மன்னென நகூஉப்
பெயர்ந்தோளே”, “சென்றோ ரன்பிலர் தோழி” எனவரும்.
  

இம்     மூன்றும்     படுத்தலோசையால்     தொழிற்பெயராயவழி
ஆவோவாதல் பெயரியலுட்
1கொள்ளப்படும்.                   (14)


1. பெயரியல் - 41ஆம் நூற்பா.

******************************************************************