என் - எனின், இஃது மேலதன் முடிபு முடிதலுடையது பிறதும் உண்டென்பதும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஆய் என்னும் ஈற்றுச் சொல்லும் மேற்சொல்லப் பட்ட மூன்றீற்றினோடும் ஆகாரம் ஓகாரமாதல் கொள்ளப்படும், (எ - று.) (எ - டு.) “வந்தாய் மன்ற தெண்கடற் சேர்ப்ப” எனவரும் இது விரவு வினையுள் உள்ள தாகலான், ஈண்டுக் கூறியது என்னையெனின், விரவே எனினும் இவ்வாறு திரிவது உயர்திணையின்மேல் வந்ததாகலானும், ஆ ஓ ஆதல் அதிகாரப்பட்டமையானும் எனக்கொள்க. (15)
1.‘அவற்றொடு கொள்ளும்’ என்பது பிற உரையாசிரியர்கள் கொண்ட பாடம். சில ஏடுகளில் கல்லாடருக்கும் இதுவே பாடமாகக் காணப்படுகின்றது. |