செயற்கைப் பொருளில் மரபு வழாமை
  

20.

செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்.
 

என்  -  எனின் செயற்கைப்பொருண்மேல் மரபு இலக்கணம் வழாமற்
சொல் நிகழற்பாலவாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)   செயற்கையாகிய     பொருளை    ஆக்கம்  என்னும் வாய்பாட்டோடு சொல்லுக, (எ - று.)

(எ - டு.) மயிர் நல்லவாயின, பைங்கூழ் நல்லவாயின எனவரும்.

மேற்கூறிய  ‘இற்றெனக்  கிளத்தல்’  (கிளவி-19)  இதற்கு  அதிகாரத்
தான் வருவித்துக்கொள்க.                                   (20)

******************************************************************