என் - எனின், இதுவும் ஒரு வினையெச்சமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பின் என்பது முதலாக இடத்தென்பதீறாக ஓதப் பட்ட அத்தத்மைத்தான வாய்பாட்டு முறைமையினையுடைய காலத்தைக் குறித்த எல்லாச் சொல்லும் மேற்சொல்லிய ஒன்பதும் போல வினையெச்சத்துக்கு வாய்பாடாம் இயல்பினையுடைய, (எ - டு.) (எ - டு.) பீன்:- 1 “இளமையுந் தருவதே இறந்த பின்னே” எனவரும். முன் ;- 2 ”வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை” எனவரும். பின் என்பது பின்னரென்றும், பின்னை என்றும் வரும். முன் என்பது முன்னரென்றும் முன்னை என்றும் வரும். இனிப் பின் என்பதும் முன் என்பதும் ஒருவினையிடத்து வாராது பிற்கொண்டான், முற்கொண்டான் எனத் தாமேயும் வரும். கால் :- 3 “வலனாக வினையென்று வணங்கிநாம் விடுத்தக்கால்” எனவரும். கடை:- 4 ‘‘தொடர் கூரத் துவ்வாமை வந்தக்கடை” எனவரும். வழி :- 5 “படுசுடர் மாலையொடு பைதனோ யுழப்பாளைக் குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை விடுவழி விடுவழிச் சென்றாங் கவர் தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே” எனவரும். இடத்து :- 6 “களையுநர் கைகொல்லுங் காழ்த்த விடத்து” எனவரும். இவை காலம் விளக்கி நில்லாது குறிப்பாதலிற்போலுங் ‘காலங்கண்ணிய’ என்றது. இவையிற் குறிப்புப் போலாது ஓரோர் காலங்களைக் குறித்துக்கொள்ள நிற்கும் என்பது. விடுத்தக்கால் என்பது விடுத்து என இறந்தகாலக் குறிப்பாயிற்று. “வாரி வளங்குன்றிக்கால்” (குறள் - 14) என்பது குன்றின் என எதிர்காலக் குறிப்பாயிற்று. முன் செய்து, செய்யூ என்ற வாய்பாடு தம்மையே ஓதினவாறு போலன்றி ஈண்டு அன், ஆள், அர், ஆர் என்றாற்போல அவற்றை ஈறு பற்றி ஓதினார் எனக் கொள்க. மற்று இக்காட்டிய உதாரணங்களெல்லாம் பெயரெச்சமும் பெயரு மாகற்பால எனின், அவற்றின் பொருள் நோக்குஞ் சொல்நிலையுஞ் சந்தி நிலைமையும் அன்னவன்மையின் இவ்வாறு வருவனவற்றை வினையெச்சமென்கின்றார்போலும். ஆயினும் இவை செய்த செய்யாநின்ற செய்யும் என்னும் பெயரெச்சங்களும் இவற்றின் மறைகளும் இவற்றின் தொகையாகிய வாய்பாடும் போலும் வாய்பாடுகளை யடைந்தல்லது வாரா வென்பது. என்ன கிளவியும் என்றதனால் பான், பாக்கு, வான், வாக்கு எனவும் பிறவாறும் வருவன கொள்க. (எ - டு.) உண்பான் வந்தான், உண்பாக்கு வந்தான், கொள்வான் வந்தான், கொள்வாக்கு வந்தான் எனவரும்; பிறவுமன்ன. ஆக வினையெச்சவாய்பாடு எடுத்தோத்து வகையான் பதினைந்தும், தந்திரவுத்தி வகையானும் இலேசானும் நோக்கப் பலவகையாயும் முடிந்தது. இலேசு என்பது... ... ... ... ... ... ...யந்து கூறல். குறிப்பான் வெளிப்படுப்பது. (31)
1. கலி. 15 : 26. 2. குறள், 435. 3. கலி. 35: 15. 4. கலி. 22: 21 5. கலி. 130: 18-22 6. குறள், 879 |