என் - எனின், மேற்கூறிய காலமயக்கம் போல ஒரு பொருண்மையைக் குறியாது பல பொருட்கண்ணும் மயங்குவனவற்றுள், இறந்தகாலம் எதிர்காலத்தோடு மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இறப்பும் எதிர்வும் என்று சொல்லப்பட்ட அவ்விருகாலமும் மயங்குஞ் சொல்லாகிய சொற்களிடத்து மயக்கமாயத் தோன்றும், (எ - று.) (எ - டு.) யாம் பண்டு விளையாடுவது இக்கா ; யாம் பண்டு சூது பொருவது இக்கழகம் எனவரும். (49) |