‘கொன்’ என்னுஞ் சொல்
 

256. அச்சம் பயமிலி காலம் பெருமையென்(று)
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.
 

என் - எனின், இதுவும் அது.

(இ - ள்.)    அச்சத்தின்கண்ணும்,         பயனின்மைக்கண்ணும்,
காலத்தின்கண்ணும்,   பெருமைக்கண்ணும்  என  அக்கூறு    நான்காம்
கொன்னைச் சொல், (எ - று.)

(எ - டு.)  ‘கொள்முனையிரவூர்’ (குறுந் - 91)   என்பது   அச்சம்.
கொன்னே    வந்தான்    என்பது   பயனின்மை.  “கொன்வரல்வாடை
நினதெனக்கொண்டேனோ”   என்பது   காலம்.  ‘கொன்னூர் துஞ்சினும்
(குறுந் - 138) என்பது பெருமை.                               (6)

******************************************************************