‘ஓ’ என்னும் இடைச்சொல்லின் பொருள்
 

258. பிரிநிலை வினாவே யெதிர்மறை ஒழியிசை
தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ
இருமூன் றென்ப ஓகர ரம்மே.
 

என் - எனின், இதுவும் அது.

(இ - ள்.)     பிரிநிலைப்பொருண்மை,       வினாப்பொருண்மை,
எதிர்மறைப்பொருண்மை,    ஒழியிசைப்   பொருண்மை,   தெரிநிலைப்
பொருண்மை  என  இவற்றைச்  சிறப்புப் பொருண்மையோடு தொகுத்து
ஆறு என்று சொல்லுப ஆசிரியர் ஓகாரத்துப் பொருண்மை, (எ - று.)

(எ - டு.)  பிரிநிலை  -  அவனோ  கொண்டான்  என்பது.  இஃது
இப்போது வினாவாய் நடக்கின்றதென உணர்க.

இனி வினா - அவனோ அல்லனோ,
இனி எதிர்மறை - யானோகொள்வேன் என்பது.
இனி ஒழியிசை - கொளலோ கொண்டான் என்பது.
இனித் தெரிநிலை - நன்றோவன்று தீதோவன்று என்பது.
இனிச் சிறப்பு - ஓபெரிது என்பது.                          (8)

******************************************************************