24.

1உருவென மொழியினு மஃறிணைப் பிரிப்பினும்
இருவீற்று முரித்தே சுட்டுங் காலை.
 

என்   -   எனின்   திணை   ஐயத்துக்கண்ணும்,  அஃறிணைப்பால்
ஐயத்துக் கண்ணும் வழீஇயமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)   உருவெனச்       சொல்லுமிடத்தும்     அஃறிணைப்
பிரிப்பின்கண்ணும்,  இவ்விரண்டு   கூற்றின்    கண்ணும்,  ஐயமுரித்துக்
கருதுங்காலத்து (எ - று.)

என்றது  திணையையந்  தோன்றியவழி  உருவு   என்று  சொல்லுக.
அஃறிணைப்பாலையந்   தோன்றியவழி   அஃறிணை   இயற்பெயராகிய
பொதுப்பெயராற் சொல்லுக. (எ - று.)

ஒருமையும்     பன்மையும்      வினையாற்     பிரிக்கப்படுதலின்,
ஆகுபெயரான் அஃறிணை இயற்பெயர் பிரிப்பு எனப்பட்டது.

ஐயமென்பது  அதிகாரத்தான்  வருவிக்க. திணையையம் அஃறிணைப்
பால்  ஐயம்  என்பன   சூத்திரத்துள்  இல்லையாயினும்,  உருவென்றும்,
அஃறிணைப்பிரிப்பு  என்றுங்   கூறிய   வாய்பாட்டான் உய்த்துணர்ந்து
கொள்ளப்படும்.

(எ - டு.) குற்றிகொல்லோ? மகன் கொல்லோ? இதோ தோன்றுகின்ற
உரு என்பது,

ஒன்றின  முடித்தல்  என்பதனால்  உருவேயன்றி   வடிவு,  பிழம்பு,
பிண்டம்   என்பனவற்றானுஞ்   சொல்லுக.   இதற்குக்  காணாதவிடத்து
ஐயமுங்கொள்க.

இனி,   அஃறிணைப்பால்  ஐயம்  ஒன்றுகொல்லோ  பல கொல்லோ
செய்புக்க   பெற்றம்?   என்பது.    இதற்குக்    கண்டவிடத்து   ஐயம்
என்பதில்லை.

இதனுள் திணை  ஐயத்துக்  கூறிய உருவு என்னும் வழக்கு உடலுயிர்
கூட்டப்  பொருண்மையாகிய  மகன்   என்னும்   நிலைமைக்க  ஏலாது
அவனுடலைப்   பிரிய   நின்று   உணர்த்தினமையான்  அதுவும்  ஓர்
திணைவழுவமைதி எனப்படும்.

அஃறிணைப்பால்   ஐயத்துக்  கூறிய  இயற்பெயர் பொது வெனினும்
சொல்லுதற்கண்  ஒருபால்மேல்  நிகழற்பாலது  அவ்வாறு  நில்லாது இரு
பால்மேலும்  நின்றமையின்   இதுவும்  ஓர்   மரபுவழூஉவமைதி  எனக்
கொள்க.                                                (24)


1. உருபென என்பது    சேனாவரையர்,    தெய்வச்    சிலையார்
ஆகியோரது பாடம்.

******************************************************************