தன்மை முன்னிலைக்குரிய சொற்கள்
 

29.

அவற்றுள்,
தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும்
தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த.
 

என்  -  எனின்  மேற்கூறிய   சொற்களுள்  சிலவற்றிக்குச்  சிறப்பு
வகையான் இட இலக்கணங் கூறுதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்கூறப்பட்ட  நான்கு  சொல்லுள்ளும்,  தரும்  வரும்
என்னுஞ்    சொல்லிரண்டும்    தன்மை    முன்னிலைக்கும்    ஆம்;
படர்க்கைக்கு ஆகாது, (எ - று.)

(எ -  டு.)   எனக்குத்  தருங்  காணம்.  நினக்கு  வருங்  காணம்
எனவரும்.

******************************************************************