இதுவுமது
 

37.

பொருளொடு புணராச் சுட்டுப்பெய ராயினும்
பொருள் வேறுபடாஅ தொன்றா கும்மே.

 

என் -  எனின்  இஃது  ஒருபொருண்மேல் இருபெயர் வழுக்காத்தல்
நுதலிற்று.  மேல்  இவையல்லது  பயறு   இல்லை  என்பதனைப்பற்றிப்
பிறத்தலான் மேலதற்கே புறனடை யெனினும் அமையும்.

(இ - ள்.)   பொருளோடு     பொருந்தாச்    சுட்டுப்பெயராயினும்
பொருள்வேறுபடாது; ஒரு பொருளேயாகும், (எ - று.)

(எ - டு.) இவையல்லது பயறு இல்லை எனவரும்.

இவை யென்பது   பயறே  யெனினும் பயறென்பது பின்னுண்மையின்
தன்மேற்     செல்லாது    பிறிதொன்றனைச்      சொல்லியதுபோலும்
நோக்குடைத்தே யெனினும் அமைக, (எ - று.)

இதனாற்  சொல்லியது ஒருபொருண்மேல் இருபெயரும் பல பெயருங்
கூறுதல்  இலக்கணமே   யெனினும்   இயைபுபடக்  கூறவேண்டுமென்று
அவ்வழி     இயைபில்லது      கண்டு     அம்     மரபுவழுவினை
அமைத்தவாறாயிற்று.                                      (37)

******************************************************************