ஒருவன் ஒருத்திப் பெயர் மேல் எண்ணில எனல்
 

44.

ஒருமையெண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது.
 

என் -  எனின்  எண்ணும்  வகையாற்  சொல்லும் ஒருவகைச் சொல்
நிகழ்ச்சி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்) ஒருமைப்    பொருட்குரிய   எண்ணாய்,   உயர்திணை
இருபாற்கும்   பொதுவாகிய   ஒருவர்    என்னுஞ்    சொல்லினின்றும்
பொதுமைகெடப்   பிரித்துணரப்படும்   ஒருவன்    என்னுஞ்    சொல்
லாயினும்  ஒருத்தி  என்னுஞ் சொல்லி£யினும்  எண்ணாதபொழுது  தன்
ஒருமை விளங்குந்ததுணையல்லது,  எண்ணுமுறைக்கண்  முதலெண்ணுங்
காலும் அவ்வாறே எண்ணுக.

(எ - டு.)  ஆண்மக்கள்  பலர்  நின்றாரை எண்ணுங்காலும் ஒருவர்
இருவர்  நால்வர்  என்று எண்ணுக; பெண்டிர்  பலரை  எண்ணுங்காலும்
அவ்வாறே எண்ணுக.

ஒருவன் என்பதும்  ஒருத்தி  என்பதும்  ஒருமையெண்ணே; எண்ணு
முறைமைக்கண்ணும்   ஆகாமை   யென்னை   யெனின்,   பொருளான்
ஆகாமை  இல்லை, ஒருவன் என்பதற்கேற்ப  மேலும்  இருவன்  மூவன்
என  னகரவீற்  றியைபு  இன்மையானும்,   ஒருத்தி   என்பதற்கு  ஏற்ப
இருத்தி  முத்தியென   இகரவீற்றியைபின்மையானும்,   மேல்  வருகின்ற
ரகரவீறோடு   ஒருவர்   என்பது   சொல்லியைபுடைமையின்   அதுவே
கொள்ளப்பபட்டது.   இதனாற்  சொல்லியது   எண்ணின்கட்   பிறக்கும்
மரபிலக்கணம் என உணர்க. 
                                (44)

******************************************************************