என் - எனின் எண்ணிக்கண் திணைவழுவமையுமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வியங்கோட்கண் எண்ணப்படும் பெயரைத் திணைவிராய்வரும் வரவினை நீக்கார் கொள்வர் ஆசிரியர், (எ - று.) (எ - டு.)ஆவும் ஆயனுஞ் செல்க எனவரும். தன்னினமுடித்தல் என்பதனான், வியங்கோளல்லாத விரவுவினைக் கண்ணுஞ் சிறுபான்மை வருவன கொள்க. அவை ஆவும் ஆயனுஞ் சென்ற கானம் என்பன போல்வன. இதனாற் கூறியது எண்ணின்கண் திணைபற்றிப் பிறக்கும் மரபுவழூஉவமைதி என உணர்க. (45) |