என் - எனின் இதுவும் அது. (இ - ள்.) வேறுவினைப் பொதுச் சொற்களைப் பொதுமையிற் பிரித்து எண்ணுங்காலத்தும் ஒன்றன் வினையாற்கிளவாது பொது வினையாற் கிளத்தல் அதற்கிலக்கணம், (எ - று.) (எ - டு.) யாழுங் குழலும் பறையும் இயம்பினார் எனவரும். இதனாற் சொல்லியது அப் பொதுச் சொற்களைப் பிரித்தெண்ணும் வழியும் வினை முடிபின் மரபு வழுவாமற் சொல்லுக என்பதாயிற்று. (47)
1. ‘எண்ணுங் காலை’ என்பது தெய்வச்சிலையார் பாடம். |