இரட்டைக்கிளவி
 
  

48.

1இரட்டைக் கிளவி இரட்டிற் பிரிந்திசையா.
 

என் - எனின் உரிச்சொற்கண் மரபு வழுக்காத்தல்  நுதலிற்று.

(இ - ள்.) இரட்டித்துச் சொல்லப்படுஞ் சொற்கள்  அவ்விரட் டித்துச்
சொல்லுதலிற் பிரித்துச் சொல்லப்படா, (எ - று.)

அது இசை, குறிப்பு, பண்பென மூன்று வகைப்படும்.

(எ - டு.) சுருசுருத்தது,  மொடு மொடுத்தது என இவை இசை பற்றி
வந்தன. கொறு  கொறுத்தன,   மொறு மொறுத்தார்  என்பன  குறிப்புப்
பற்றி    வந்தன.   குறுகுறுத்தார்,   கறுகறுத்தார்    என்பன   பண்பு
பற்றிவந்தன.

இதனாற்    சொல்லியது, ஒரு பொருட்கண் இரு சொல்லினை ஒரு
பொருள்  வேறுபாடு  குறியாது  கூறின்  மரபல்ல எனினும், அவ்வாறு
இரட்டிக்  கூறலே அவற்றிக்கு அடிப்பாடாகலின், இனி, அதனை  மரபு
வழுவற்க   என   மரபு  கூறியவாறாயிற்று.  இது  மரபு  வழுவமைதி
போலும்.                                               (48)


1. இரட்டுப்  பிரிந்திசையா    என்பது    இளம்பூரணர்   பாடம்.

******************************************************************