மரபு வழுக்காத்தல்
 

56.

குறித்தோன் கூற்றம் தெரித்துமொழி கிளவி.
 

என் - எனின்,   இதுவுமோர்   செயற்கைப்   பொருளின்  மேல்
மரபுவழுக் காத்தல் நுதலிற்று.

(இ - ள்.) உலகத்   தொப்ப   முடிந்த   பொருளை   ஒவ்வாமற்
சொல்லக்குறித்தவன்  சொல்லுஞ்  சொல்லாதற்கு  ஓர் காரணங் கூறிக்
கூறுஞ்சொல்லாயிருக்கும், (எ - று.)

(எ - டு.) பல்லார்தோ டோய்ந்து வருதலாற் 1பூம்பொய்கை  
          நல்வய லூரநின் றார்புலால்-புல்லெருக்க
          மாசின் மணிப்பூணெம் மைந்தன் மலைந்தமையால்
          காதற்றாய் நாறு மெமக்கு.

இதனால் சொல்லியது, ஓர் இயற்கைப்பொருள் ஓர் இயற்கையாக ஓர்
காரணங்கருதிக் கூறுமிடத்துத்  தான்  கருதிய காரணத்தினை விளங்கச்
சொல்லுகவென  ஓர்  மரபாராய்ச்சி  கூறியவாறு.  இதுவும்  ஓர்  மரபு
வழுவமைதிபோலும்.                                      (56)


1. பாய்புனல் என்பதும் பாடம்.

******************************************************************