என் - எனின் மேல் அஃறிணையென்றார்; அதனை இனைத்துப் பால்படுமென்று, அது படும் பால்விரித்தல் நுதலிற்று. (இ - ள்) ஒன்றனை யறியுஞ் சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல்லுமென்று சொல்லப்பட்ட அவ்விரண்டு பாலினையுமுணர்த்துஞ்சொல் அஃறிணையன (எ - று.) இதனாற் சொல்லியது மேற்கூறிநின்ற அஃறிணைப் பொருளினையும், அஃறிணைச் சொல்லினையும் விரிவகையான் ஒருமை பன்மை யெனவும், ஒருமைச்சொல் பன்மைச்சொல் எனவும் இரண்டு கூறுபடும் என்பதூஉம் கூறியவாறாயிற்று. (3) |