குடிமை ஆண்மை என்பனவற்றிக்குப் புறனடை
 
   

59.

நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே.
 

என் - எனின்,   குடிமை   ஆண்மை   என்றதற்கோர்  புறனடை
யுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நின்ற  வாய்பாட்டானே  நின்று   உயர்திணை  முடிபு
பெறுதல் இக்   காலம்,  உலகம்   என்னுந்   தொடக்கத்தனவற்றிற்கு 
இயல்பன்று       எனவே            மேற்கூறிய       ஆண்மை 
என்னுந்தொடக்கத்தனவற்றிக்கு  இயல்பு, (எ - று.)

(எ - டு.) குடிமைநல்லன்,    வேந்துசெங்கோல்நல்லன்  எனவரும்.
உயர்திணை   முடிபிழந்து   நின்றனவற்றை  அம்முடிபுடைய   என்று
எய்துவித்தவாறு.

இம்முடிபு இலக்கணமாதலின், இதுவே பெரும்பான்மை யாகற் பாற்று
எனின்,   இலக்கணமே   எனினும்  வழக்குப்  பயிற்சியான்  அதுவே
பெரும்பான்மை யாகற்பாற்று என உணர்வது.

இச்சொற்கள் ஈறு வேறுபட்டு குடிமகன், வேந்தன், ஆண்மகன் என
நிற்பனவற்றிற்கு உயர்திணை முடிபே முடிபெனக் கொள்க.

இதனாற் சொல்லியது மேற்கூறிய இருவகைத் திணைவழுவினையும்
ஒருவகைத்  தன்மேல்  முடிபுடையவாயும்  வருவன கண்டு அவற்றின்
உண்மையும்,    இவற்றின்       இன்மையும்       உடன்கொண்டு
கூறியவாறாயிற்று.
                                       (59)

******************************************************************