என் - எனின், வேற்றுமைகளது பெயரும் முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.)மேல் வேற்றுமை என்று சொல்லாப்பட்டவைதாம் பெயர், ஐ, ஒடு, கு, இன், அது, கண், விளி இறுதியாக உடையன, (எ - று.) அப்பெயர் பெயர். அம்முறை : எழுவாய் வேற்றுமை ஏனை வேற்றுமைக்கும் சார்பாதல் நோக்கி முன்வைக்கப்பட்டது. விளி வேற்றுமை, எல்லாவற்றினுஞ் சிறப்பின்மை நோக்கிப் பின் வைக்கப் பட்டது. ஐயினை இரண்டாவதென்றும், ஒடுவினை மூன்றாவதென்றும், இவ் வாறே இவை கூறுதற்குக் காரணம் உண்டோ எனின், காரணமும் இல்லை; காரணம் இல்லையேல் வேண்டியவாறு கூறினும் அமையும் எனின், அமையாது; முன்னூலுள் ஓதிய முறை அது வென்பது. (3) |