என் - எனின், நிறுத்த முறையானே முதற்கண் நின்ற பெயர்வேற்றுமை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற் சொல்லப்பட்ட வேற்றுமை எட்டனுள் முதல் வேற்றுமையாவது பெயர்ச் சொல், பயனிலைப்பாடு தோன்ற நிற்கும் நிலைமை, (எ - று.) (எ - டு.) ஆ, மக்கள் எனவரும். விளியோடு இதனிடை வேற்றுமை என்னை யெனின், ஈறுதிரிதலும், ஈறுதிரியாமையும், ஈறுதிரியாதவழி ஒருவழிப் படர்க்கையாதலும், முன்னிலை யாதலும் எனக் கொள்க. (4) |