என் - எனின், தனிப்பெயரேயன்றித் தொகைப் பெயர்களும் பயனிலை கொள்ளும் என்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) இரண்டு பெயர்ச்சொன் முதலாக வுளவாகிய தொகைச் சொற்களும் உள, (எ - று.) (எ - டு.) யானைக் கோடு உண்டு, செல்க, வீழ்ந்தது, பெரிது பல என வரும். இவை பெயரினாகிய தொகை. கொல்யானை உண்டு, செல்க, வீழ்ந்தது, யாது பெரிது, பல என இவை வினையினாகிய தொகை. தொகையும் பயனிலை கொள்ளும் என்கின்றமையின் இவையும் எழுவாயாகற்பால பிற; அதற்கு விதியாதோ எனின், எச்ச வியலுள் “எல்லாத் தொகையும்” என்னும் சூத்திரத்துக் கூறப்படும் என்பது. (6) |