என் - எனின், பெயர் உருபேற்கும் வழிப்படுவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) எவ்விடத்துப் பெயரும் விளங்கத்தோன்றி மேற் சொல்லப்பட்ட வேற்றுமையாய்ப் பயனிலைகொள்ளும் இயல்பின் கண்ணே நிற்றல் செவ்விது என்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு. மேற்காட்டின இவ்விதி 1மேல்பெற்றாமன்றோ எனின், மேல் பெற்ற தனையே ஈண்டும் தந்து வலியுறுத்தார் பிறிதொன்று விளக்கிய என்பது. அஃது யாதோ எனின், பயனிலை ஏற்றலிற் செவ்விது என, உருபேற்றலும் பெயர்க்கு இலக்கணமன்றே, அதனிற் செவ்விய ஆகாதனவும் உள என்பது. நீயிர் என்பது பெயர். நீயிரை உன உருபேலாது. இது நும் என்னும் பெயர் அவ்வழிப் புணர்ச்சித்திரிபு என்றது. உம்மை என உருபேற்கு மால் எனின், பிற சந்தித்திரிபு போல நிலைமொழி நிலைதோற்ற நில்லாது திரிபின் பிறிதோர் பெயர் நிலைபட நிற்றலின் வேறோர் பெயர் என வேண்டியது போலும். இதனகத்து விகற்பமெல்லாம் உரையிற்கொள்க. இந்நிகரன ஓருருபும் ஏலாதன. அவ்வாய்க் கொண்டான் என்பது. அவ்வாய்க் கட் கொண்ட.......விழா உருபேலாதது. இந்நிகரன பிற உருபேற்கு மேனும் அறிந்துகொள்க. (7)
1. வேற்றுமையியல், 5 ஆம் நூற்பா. |