இரண்டாம் வேற்றுமை
 

72.

1இரண்டாகுவதே,
ஐ எனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எவ்வழி வரினும் வினையே வினைக்குறிப்
பவ்விரு முதலின் தோன்றும் அதுவே.
 

1 இதனையும் அடுத்த நூற்பாவையும் இணைத்து ஓரே நூற்பாவாகக்
கொள்வர், இளம் பூரணர். இவ்வுரையாசிரியர் இவ்விருநூற்பாக்களுக்கும்
உரையியைபு நோக்கி ஒன்றாகவே பொருளுரைத்துள்ளார்.  இங்ஙனமே
ஏழாம்வேற்றுமைகாறும் இவ்வுரை செல்லும்.

******************************************************************