உருபு நோக்கிவரும் சொற்களின் இலக்கணம்
 

85.
 

பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய என்ப.
 

என் -  எனின், ஐ முதலிய ஆறுருபிற்கும் பொதுவாய இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வேற்றுமைச்           சொல்லினது       பொருளை
விரித்துணர்த்துங்காலத்து,  அவ்வேற்றுமைப்   பொருள்கள்   பெயரது
ஈற்றின் கண்ணே நின்று நடக்கும், தொக்க விடத்து நின்று, (எ - று.)

(எ - டு.) மரம் குறைத்தான் என்பது மரத்தைக் குறைத்தான்  என
இறுதிக்கண்  விரிந்து  நின்றது.  தாய்  மூவர் என்பது தாயோடு மூவர்
என விரிந்தது. பிறவும் அன்ன.

இது     “கூறிய முறையின்” 2 என்றதனால் அடங்காதோ  எனின்
அஃது   உருபுநிற்கும்   இடம்   கூறியது;  அங்ஙனம்  நின்ற  உருபு
விகாரப்பட்டு, தொக்குநின்று பின் விரியும் வழியும் பிறாண்டு  விரியாது
முன் கூறிய அதனையே திரிபுபடுவழிக் கூறியது எனக்கொள்க.    (22)


1. இதனையும்     அடுத்த   நூற்பாவையும்  ஒன்றாகக்   கூறுவர்
சேனாவரையரும்     நச்சினார்க்கினியரும்      தெய்வச்சிலையாரும்.
இளம்பூரணர் இவர் கொண்டவாறே கொள்வார்.

2. தொல்-சொல் - 70.

என்  -  எனின், உருபு  நோக்கிவரும்  சொற்களின்  இலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பல நெறியாக  அவ்வவ்  வேற்றுமையின்  பொருளோடு
பொருந்தி  ஒலிக்கும்  எவ்வகைப்பட்ட  சொல்லும் வேற்றுமைபோலப்
பிரியாது இறுதிக்கண் விரிந்து நிற்றற்குரிய, (எ - று.)

விரித்தற்குரிய என்பது, முன்னின்ற அதிகாரத்தால் கொள்க. இனித்
தொகுத்தலும்   உரிய  என்பது,  ஒன்றென  முடித்தல்  என்பதனால்
கொள்க.

(எ - டு.)படைக்கை  என்பது  படையினைப்  பிடித்த  கை என
விரிந்தது. குதிரைத் தேர் என்பது குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என
விரிந்தது. பிறவும் அன்ன. ஆறாவதற்குப் பொருள்விரிதல் இல்லை.

உருபுகள் தொகுத்தலும் விரிதலும் கூறியவழியே அவ்வுருபுநோக்கி
வரும்  சொற்கள்  தொகுத்தலும்  விரித்தலும்  அடங்குமால்  எனின்,
அவ்வுருபு   தொக்குழித்   தொக்கும்,  விரிந்துழி  விரிந்தும்  நிற்றல்
ஒருதலையன்மையின், அதற்கும் வேறு கூறவேண்டும் என்பது.

மரம்  குறைத்தான், குழையை   உடையன்;   உருபு  தொக்குழித்
தொகாதாயிற்று எனக் கொள்க.                            (23)

வேற்றுமையியல் முற்றும்.

******************************************************************