என் - எனின், இதுவும் அவ்விரண்டன் மயக்கமே உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்கூறிய இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் கன்றல் என்னும் பொருண்மையும், செலவு என்னும் பொருண்மையும் பொருந்திவரும் அவ்வுருபுகளது வினை கூறுமிடத்து, (எ - று.) (எ - டு.) சூதினைக் கன்றினான், சூதின்கண் கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கண் சென்றான் எனவரும். (3) |