என் - எனின் மகடூஉவறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்) மகடூஉவினை யறியும் சொல்லாவது ளகாரமாகிய ஒற்றினை யீறாகவுடைய சொல், (எ - று.) (எ - டு.) உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள்: இவை தெரிநிலைவினை, கரியள், செய்யள் : இவை குறிப்புவினை ; வேறுபாடு அறிந்து கொள்க. இனி முற்சூத்திரத்துரையில் விரிந்தாங்கு ‘னஃகா னொற்றெ ஆடூஉ வறிசொல் எனச் சூத்திரம் பொதுப்பட நின்றமையின்’ என்று தொடங்கி உரைத்தவைகளெல்லாம் ஈண்டும் விரிந்துரைத்துக்கொள்க. (6) |