முதல் சினைப் பெயர்களில் வரும் உருபுகள்
 

89.

1முதல்சினைக் கிளவிச் கதுஎன் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கை வருமே.
 

என்    - எனின், வேற்றுமைக்கண்ணதோர் சொல்லுதல் வகைமை
உணர்த்துதல்  நுதலிற்று. மேற்கூறிய சினைநிலைக்கிளவி  என்பதுற்குப்
புறனடை எனினும் அமையும். முதற்பொருட்கும் முதலோடு தொடர்ந்த
சினைப்பொருட்கும் உருபுகள் வருமாறு கூறினாராம்.

(இ - ள்.) அது என்   வேற்றுமை  முதற்கண்   வரின்   அதன்
சினைக்கு இரண்டாம் வேற்றுமை வரும், (எ - று.)

(எ - டு.) யானையது    கோட்டைக்   குறைத்தான்  ; சாத்தனது
கண்ணைக் குத்தினான் என வரும்.                           (4)


1. இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர்
தெய்வச்சிலையார்.

******************************************************************