என் - எனின், முதல் சினை என்னும் பொருண்மை அதிகாரப்பட்டமை கண்டு அப்பொருளை ஆராய்தல் நுதலிற்று. (இ - ள்.) முதல் என்றும் சினை என்றும் சொல்லப்படுகின்ற பொருள்கள் இது முதல் இது சினை எனத் தம்மின் வேறுபட நில்லாது, ஒருவன் சொல்லும் காலத்து அவன் சொல்லும் கருத்தின்கண் இது முதல் இது சினை என வேறுபாடு உணரநிற்கும், (எ - று.) (எ- டு.) கோட்டது நுனியைக் குறைத்தான், கோட்டை நுனிக் கண் குறைத்தான், கோட்டை நுனியைக் குறைத்தான் ; இது சினை முதலாய் வந்தவாறு. படை யென்பதனை முதலாகப் பார்க்கும் வழிப் படையினது யானை எனச் சினையேபோலே நிற்கும் என்பது. (6) |