மூன்றினும் ஐந்தினும் ஏதுப்பொருள் வரும் எனல
 

94.

மூன்றனும் ஐந்தனும் தோன்றக் கூறிய
ஆக்கமொடு புணர்ந்த ஏதுக் கிளவி
நோக்கோ ரனைய என்மனார் புலவர்.
 

என்  - எனின்,  மூன்றாம் வேற்றுமையும், ஐந்தாம் வேற்றுமையும்
ஏதுப்பொருண்மைக்கு ஒத்த கிழமைய என்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மூன்றாவதனினாலும்,    ஐந்தாவதனினாலும்  விளங்கச்
சொல்லப்பட்ட  ஆக்கப்  பொருண்மையோடு  கூடிய  ஏது  என்னும்
பொருண்மை   அவ்வுருபுகளால்   அப்பொருள்  விளங்குமிடத்து  
1
அஃதில்லை, இரண்டும் ஒருதன்மைய, (எ - று.)

(எ - டு.) வாணிகத்தான்  ஆயினான்,  வாணிகத்தின்  ஆயினான்
என்பன.

கிளவி     யென்றதற்குப்  பெயராற்  பொருளினை  ஆக்கமொடு
புணர்ந்ததென்று   விசேடித்துக்   கூறினமையின்  ஆக்கமல்லா  ஏது
ஒத்தகிழமைத்தன்று என்பது போலும் கருத்து.                 (9)


1. அஃதென்றது மூன்றாவதும் ஐந்தாவதுமாகிய  உருபுவேறுபாட்டை.

******************************************************************