தடுமாறு தொழிற் பெயரில், இரண்டும் மூன்றும்
வரும் எனல்
 

97.

தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும்
கடிநிலை இலவே பொருள்வயி னான.
 

என்  -  எனின்,   இரண்டாவதும்   மூன்றாவதும்   மயங்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ -ள்.) ... .... ...

வினையுடைய பெயர்க்கண் இரண்டாவதும்,  மூன்றாவதும்  நீக்கும்
நிலைமையில; பொருள்படுமிடத்து, (எ - று.)

(எ - டு.) புலிகொல் யானை என்பது,  ஒருகால் புலியைக் கொன்ற
யானை  எனவும்,  ஒருகால்  புலியாற் கொல்லப்பட்ட யானை எனவும்
கொல்லுதல்   தொழில்   இரண்டிற்குஞ்   சென்றுவருதலில்  தடுமாறு
தொழிற்பெயர்   என்னப்பட்டது.  புலியால்  என்புழி வினை  யாதோ
எனின்,  ஆண்டும் வினை கொன்ற என்பது. அஃதேல் புலி கருவியாக
யானைதான் பிறிதொன்றினைக் கொன்றது என்பது பொருளாமாறு என்
எனின்,   ‘செயப்பட   பொருளை   செய்தது  போல’
1  என்பதனால்
கொல்லப்பட்ட என்பது பொருளாக நோக்க அவ்வாறாகும் என்பது.

செயப்படு  பொருட்கண் வினைதொகுமால்   எனின்,  செய்குன்று,
உறைபதி எனப் பிறபொருட்கண்ணுந் தொகும் என்பது.         (12)


1. வினையியல் 48ஆம் நூற்பா.

******************************************************************