மேலதற்கோர் புறனடை
 

98.

ஈற்றுப்பெயர் முன்னர் மெய்யறி பனுவலின்
வேற்றுமை தெரிப உணரு மோரே.
 

என் - எனின், மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

(இ- ள்.) இறுதிப்  பெயர் முன்னர்ப் பொருளறிய வருஞ்சொல்லான்,
இன்ன   வேற்றுமை   யென   அறிக;   அத்தொகைச்   சொல்லாது
பொருளினை உணர்வார், (எ -று.)

(எ - டு.) புலி  கொல்  யானை ஓடுகின்றது, புலி கொல் யானைக்
கோடு வந்தது என வரும்.

மெய்யறிபனுவல் என்றதனால் பொருள் இயைய வாராதனவும்  உள;
புலி   கொல்   யானை   கிடந்தது  என்றாற்  போல்வன.  ஆண்டுச்
சொல்லுவான் குறிப்பினான் அறிக.
                          (13)

******************************************************************