ளைச் சுருக்கிப் (பதிகம் = ) பாயிரங் கூறுதலைச் சிந்தாமணி, மணிமேகலை முதலிய நூல்களுள்ளுங் காண்க. | இனிக் கொழு என்பதற்குத் துன்னூசி செல்லுதற்கு முதலிற் குத்தி வழியாக்குவதொரு கருவி என்றும், துன்னூசி தையலூசி என்றும் இவை தோற்கருவிசெய்வோர் வைத்திருப்பவை என்றும் கலப்பையும் கொழுவும்போல் ஒருங்கு சேர்ந்திருப்பனவன்றி, இவை வேறுவேறாக இருப்பனவாதலின் இவையே பொருந்துவன என்றும் கூறுவாருமுளர். பொருந்துவது கொள்க. | தலையமைந்தயானை - யூதநாதன். வினையமைந்தபாகன் - அதனைச் செலுத்துந் தொழிலமைந்த பாகன். இனி, தலையமைந்தயானை என்பதற்கு அரசுவா எனினுமாம். அது அசனிவேகம், நளகிரி என்பனபோன்றது. வினையமைந்த பாகன் - சீவகன், உதயணன் போன்றான்.இன்றியமையாத - வேண்டியதான. அப் பாயிரம் இன்றியமையாச் சிறப்பிற்று எனக் கூட்டுக. ஒருதலையமைந்த யானையை அடக்கிச் செலுத்தற்குப் பாகன் அதனினுமிறப்பச் சிறியவனா யிருந்தாலும் அவனே வேண்டும் ; ஒரு பெரிய ஆகாயத்தை விளக்குதற்கு ஞாயிறுந் திங்களும் அதனினுமிறப்பச் சிறியனவாயினும் அவையே வேண்டும். அதுபோலவே ஒரு பெரிய இலக்கணநூலை விளக்கற்குப் பாயிரம் அதனினுமிறப்பச் சிறிதாயினும் அதுவே வேண்டும். ஏனெனின் ; நூற்பொருளைத் தன்னுளடக்கி விளக்குமாற்றல் அதன்கணமைந் திருத்தலின். அதுபற்றியே இன்றியமையாச் சிறப்பிற்று என்றார். குன்று - மலை. பறந்து செல்கின்ற ஒரு குருவியை அது செல்லுந் திசைக்கண் நீண்டு உயர்ந்த ஒரு மலையிருக்குமாயின் அது, அதன் செலவைத் தடுக்கும். அதனால் அது இடர்ப்படும். அதுபோலவும், ஒரு மான் தான் வசிக்கும் காட்டைவிட்டு ஒரு குறிச்சிக்குட் புகுமாயின் அங்குள்ளார் அதைத் தடைப்படுத்த அது அப்பாற் போகமுடியாது இடர்ப்படும். அதுபோலவும், பாயிரங்கேளாது ஒரு மாணாக்கன் ஒரு நூலின்கட் புகுவானாயின் அந் நூலின்கட் பல ஐயங்களிடையே தோன்றி அவனை அப்பாற் செல்லவிடாது தடுப்ப அவன் இடர்ப்படுவான். ஆதலாற் பாயிரங் கேட்கவேண்டுமென்பது கருத்து. | கற்கப்படுவோர் | கற்கப்படுவோர் - கற்கப்படத்தக்க நல்லாசிரியர், உலைவிலுணர் வுடையோர் - அசைவற்ற உணர்ச்சி யுடையோர். என்றது ஐயந்திரிபின்றிக் கற்றவரை. | மலை | அளக்கலாகாப் பெருமை - அளக்கப்படாத உருவின் பெருமை. அருமை - அரிய பொருள்களைத் தன்னிடத் துடைமை, மருங்ககல முடைமை - பக்கம் விஸ்தாரமுடைமை. இனி, அளவிடப்படாத கல்வியறிவின் பெருமையும், நூல்களி னரிய பொருளை ஆராய்ந்து தன்னிடத்தே கொண்டிருத்தலும், பக்கத்திலுள்ளவர்களாலுந் தெரியப்பட்ட கல்விப் புகழுடைமையும், தருக்கஞ்செய்து பிறரால் நெருங்குதற் கருமையுமென ஆசிரியனுக்குப் பொருந்த உரைத்துக்கொள்க. |
|
|