தொகைமரபு167

பெறுதலின் ஈண்டு விலக்கல் வேண்டாவெனின்,  எடுத்தோத்தில்  வழியதே
உய்த்துணர்ச்சியென்று கொள்க.
 

இது முதலாக அல்வழி கூறுகின்றார்.
 

(21)
 

164.

உயிரும் புள்ளியு மிறுதி யாகி
யளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி
யுளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉங் காலந் தோன்றி
னொத்த தென்ப வேயென் சாரியை. 
 

இஃது  அளவும் நிறையும் எண்ணுமாகிய பெயர்கள் தம்மிற் புணருமாறு
கூறுகின்றது.
 

இதன் பொருள்: உயிரும்   புள்ளியும்   இறுதி  யாகி  -   உயிரும்
1புள்ளியுந் தமக்கு ஈறாய், அளவும் நிறையும் எண்ணுஞ் சுட்டி  உளவெனப்
பட்ட எல்லாச் சொல்லும் - அளவையும் நிறையையும்  எண்ணையுங் கருதி
வருவனவுளவென்று ஆசிரியர் கூறப்பட்ட  எல்லாச்  சொற்களும்,  தத்தங்
கிளவி  தம்மகப்  பட்ட -  தத்தமக்கு  இனமாகிய  சொற்களாய்த்  தம்மிற்
குறைந்த சொற்கள், முத்தை வரூஉங்  காலந்  தோன்றின்  -  தம்முன்னே
வருங் காலந் தோன்றுமாயின், ஏயென்  சாரியை  ஒத்தது  என்ப  -  தாம்
ஏயென்  சாரியை   பெற்று  முடிதலைப்  பொருந்திற்றென்பார்  ஆசிரியர்
என்றவாறு.
 

முந்தை முத்தையென விகாரம்.
 

நாழியேயாழாக்கு உழக்கேயா  ழாக்கு கலனேபதக்கு என அளவுப்பெயர்
ஏகாரம்   பெற்றுத்     தம்முன்னர்த்    தம்மிற்   குறைந்தன   வந்தன.
தொடியேகஃசு  கழஞ்சேகுன்றி   கொள்ளேயையவி   என   நிறைப்பெயர்
ஏகாரம் பெற்றுத் தம்முன்னர்த் தம்மிற்  குறைந்தன  வந்தன.  ஒன்றேகால்
காலேகாணி  காணியேமுந்திரிகை  என  எண்ணுப்பெயர்  ஏகாரம்பெற்றுத்
தம்முன்னர்த் தம்மிற் குறைந்தன வந்தன. அதிகாரம்பட்ட


1. புள்ளி  என்றதனால்   புள்ளிபெறும்   மெய்யீறும் குற்றியலுகரவீறுங்
கொள்ளப்படும். இது எமது கருத்து.