228உயிர்மயங்கியல்

என  வல்லெழுத்தும்    மெல்லெழுத்துங்    கொடுத்து   முடிக்க.  இனிச்
செருவிற்கு ஏற்புழிக்கோட  லென்பதனாற் செருக்களமென   வல்லெழுத்தே
கொடுத்து முடிக்க.
 

தெரியுங்காலை எனற்தனான் எருவின்  குறுமை  செருவின் கடுமை என
உருபிற்குச் சென்று  சாரியை  பொருட்கட்சென்றுழி வல்லெழுத்து வீழ்தலும்
எருவஞாற்சி  செருவஞாற்சி என இயல்பு கணத்துக்கண் அம்முப்பெறுதலுங்
கொள்க.  மகரம்  'மென்மையு  மிடைமையும்'  (எழு - 130)   என்பதனாற்
கெடுக்க.
 

தம்மொற்றுமிகூஉம் என உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ்  செய்தலின்
உகரம் நீடவருதலுங் கொள்க. வரூஉம் தரூஉம் படூஉம் என வரும்.
 

(58)
 

261.

ழகர வுகர நீடிட னுடைத்தே
யுகரம் வருத லாவயி னான.

 

இஃது   எய்தியன்மேற்   சிறப்புவிதி   வகுத்தது,  வல்லெழுத்தினோடு
உகரம் பெறுதலின்.
 

இதன் பொருள் ழகர  உகரம்  நீடிடன்  உடைத்து  - உகர ஈற்றுச்
சொற்களுள்  ழகரத்தோடு கூடிய  உகர   ஈற்றுச்சொல்   நீண்டு  முடியும்
இடனுடைத்து, ஆவயின் ஆன உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வந்து
முடியும் என்றவாறு.
 

உதாரணம் :எழூஉக்கதவு சிறை தானை படை என வரும்.
 

நீடிடனுடைத்து  என்றதனான்  நீளாதும் உகரம் பெறாதும் வருமாயிற்று.
குழுத்தோற்றம் என வரும்.
 

இன்னும்  இதனாற்  பழுக்காயென  அல்வழிக்கண்ணும்  இவ்விதியன்றி
வருதல் கொள்க.
 

ஆவயினான   என்றதனாற்   பெரும்பான்மை   செய்யுட்கண்  நீண்டு
உகரம்பெற்று
 

'எழூஉத் தாங்கிய கதவு மலைத்தவர்
குழூஉக் களிற்றுக் குறும் புடைத்தலின்'

(புறம் - 97)
 

எனவும்,