உதாரணம் : ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஒளஉ என வரும். இவை மூன்று மாத்திரை பெற்றன. 1இவைதாம், 'நெட்டெழுத் தேழே யோரெழுத் தொருமொழி' (எழு - 43) என்ற அந்நெட்டெழுத்துக்களே அளபெடுத்தலிற் சொல்லாதல் எய்தின. இனி 'அளபெடை யசைநிலை யாகலு முரித்தே' (செய்யுளியல் - 17) என்னுஞ் செய்யுளிற் சூத்திரத்தான் எழுத்தாந்தன்மையும் எய்திற்று. |
1. ஆஅ என்புழி ஆ என்னும் ஓரெழுத் தொருமொழியாகிய நெட்டெழுத்தே அளபெடுத்தலின் அவ்வளபெடை யெழுத்தும் அந் நெட்டெழுத்தோடு சேர்ந்து மொழியாமென்பார், ஓரெழுத் தொரு மொழியாகிய நெட்டெழுத்தே அளபெடுத்தலிற் சொல்லாத லெய்திற்றென்றார். எனவே அளபெடை எழுத்துக்குப் பொருளில்லை யாயினும் அதற்கு முன்னுள்ள நெட்டெழுத்துக்குப் பொருளுண்மையின் அதன் பொருளே தனக்கும் பொருளாய்ச் சொல்லாந் தன்மை எய்தி நிற்குமென்றபடி. சொல்லாந் தன்மை யெய்தி நிற்றலாவது: தானு மம்மொழிக் குறுப்பெழுத்துப்போல நின்று அசையாகி அலகுபெறுதல். எழுத்தாந் தன்மை யெய்தலாவது - அங்ஙனஞ் சொற்குறுப்புப்போல நின்ற அளபெடை யெழுத்து, தமக்கு முன்னுள்ள நெட்டெழுத்தே அலகுபெறத் தாம் அலகு பெறாது (அஃதாவது ஆ அ என்புழி அளபெடை யெழுத்தாகிய அகரம் தனக்கு முன்னுள்ள நெட்டெழுத்தோடு சேர்ந்து அலகு பெற்று நேர்நேர் என நில்லாமல் அந் நெட்டெழுத்தே தனித்து அலகு |