மொழிமரபு95

காலத்து     வழங்கினவென்று        கோடும்.     இவ்விதியால்   இனி
நவிலாவென்றதனானே   வகரவுகரம்,  கதவு  துரவு  குவவு புணர்வு நுகர்வு
நொவ்வு கவ்வு எனப் பயின்றுவருதலுங் கொள்க.
 

(41)
 

75.

உச்ச கார மிருமொழிக் குரித்தே.
 

இது சகார உகாரம் பலசொற்கு ஈறாய் வராது. இரு சொற்கு ஈறாமென்று
வரையறை கூறுகின்றது.
 

இதன் பொருள்:  உச்சகாரம்  -  உகரத்தோடு     கூடிய   சகாரம்,
இருமொழிக்கே உரித்து - இரண்டு மொழிக்கே ஈறாம் என்றவாறு.
 

எனவே,  பன்மொழிக்கு  ஈறாகாதென்றவாறாயிற்று.   உரித்தேயென்னும்
ஏகாரம் மொழிக்கேயெனக் கூட்டுக.
 

உதாரணம் : உசு;  இஃது  உளுவின்பெயர்.  முசு ;  இது  குரங்கினுள்
ஒருசாதி. பசு என்பதோவெனின்,  அஃது  ஆரியச்  சிதைவு.  கச்சு  குச்சு
என்றாற்போல்வன   குற்றுகரம்.   உகரம்   ஏறிய   சகரம்  இருமொழிக்கு
ஈறாமெனவே   ஏனை    உயிர்கள்    ஏறிய     சகரம்   பன்மொழிக்கு
ஈறாமாயிற்று. உச உசா விசி சே கச்சை  சோ  எனப்  பெயராயும்,  துஞ்ச
எஞ்சா எஞ்சி மூசி மூசூ என எச்சமாயும் வரும். அச்சோ என வியப்பாயும்
வரும். இன்னும் இவை வழக்கின்கட் பலவாமாறும் உணர்க.
 

(42)
 

76.

உப்ப கார மொன்றென மொழிப
1விருவயி னிலையும் பொருட்டா கும்மே.
 

இஃது  ஒருசொல்வரையறையும் :    அஃது      ஓசைவேற்றுமையால்
இருபொருள் தருமெனவுங் கூறுகின்றது.
 

இதன் பொருள்: உப்பகாரம் ஒன்றென  மொழிப - உகரத்தோடுகூடிய
பகரம் ஒருமொழிக்கல்லது பன்மொழிக்கு  ஈறாகாதென்று  கூறுவர்  புலவர்.
இருவயினிலையும் பொருட்டா


1. இச்   சூத்திரத்தால்    ஓசைபற்றிப்    பொருள்  வேறுபடுமென்பது
பெறப்படும். 'தொனி' என்பது மிக்கருத்து.