சூ. 118 :

அவற்றுவழி மருங்கின் சாரியை வருமே

(16)
 
க-து:

அவை இடமாகச் சாரியை வருமென்கின்றது.
 

பொருள் :மேற்கூறிய  பெயர், வினைகளின் பின்னாகவும் உடனாகவும்
சாரியை வரும்.
 

வழிமருங்கென்றது  உம்மைத்தொகை.   ஏற்புழிக்கோடல்  என்பதனான்
பின்வருதல் பெயர்க்கும் உடன்வருதல்  வினைக்கும்  மிக்குரிமையாகுமென
அறிக. எடுத்துக்காட்டு மேல்வரும் சிறப்புச் சூத்திர உரையுட்கண்டு கொள்க.