நிறுத்தமுறையானே ‘‘வற்று’’ என்னும் சாரியையினது இயல்பு கூறுகின்றது. ‘வஃகான் மெய்கட’ என்றதனான் வற்றுச்சாரியை என்பது பெறப்பட்டது.
பொருள் :வற்று என்னும் சாரியை, சுட்டெழுத்தை முதலாகவுடைய ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயரின் முன்னர் வகர உயிர்மெய்யுள் வகரமெய்கெட அதனை ஊர்ந்துநின்ற அகரஉயிர் மட்டும் நிற்றல் அதற்கு உளதாகிய பண்பாம்.
எ-டு :அவை + வற்று + ஐ = அவையற்றை எனவரும். இடைவந்த யகர ஒற்று உடம்படுமெய்யாகும். உருபிற்கென விதந்து கூறாமையான், அவையற்றுக்கோடு, இவையற்றுக்கோடு எனவும் வரும்.