|
சூ. 123 : | னஃகான் றஃகான் நான்க னுருபிற்கு | (21) | க-து: | னகார ஈற்றுச்சாரியைகட்குச் சிறப்பு விதி கூறுகின்றது. | பொருள் :னகரஈற்றுச்சாரியை நான்கினும் உள்ள னகர ஒற்று, நான்கனுருபு வருமிடத்து றகர ஒற்றாகத் திரியும். | எ-டு :ஆவிற்கு, விளவிற்கு, கோஒற்கு, ஒருபாற்கு, அதற்கு எனவரும். | இவ்விதி னகர ஈற்றுச் சாரியை நான்கற்கும் உரியதாகலின்‘‘அளவாகும் மொழிமுதல்’’ என்பதன் பின்வையாமல் வற்றுச் சாரியையின் பின்வைத்தார். ஆண்டுவைப்பின் இவ்விதி ‘‘இன்’’ சாரியை ஒன்றற்கே செல்லுமாகலான் என்க. |
|