எ-டு: மக + அத்து + கை = மகத்துக்கை எனவரும். இனி, அத்துச்சாரியையன்றிப் பிறசொற்கள் வரினும் நிறுத்த சொல்லின் அகரஈறு, நாடாக + ஒன்றோ = நாடாகொன்றோ எனவும், ஒழிக + இனி = ஒழிகினி எனவும், உற்ற + உழி = உற்றுழி எனவும் கெடுதலின் நிலைமொழி அகரம் கெடுமென்றலே சால்புடைத்தென்பர் வேங்கடராசுலுரெட்டியார். இவை: ஆ, ஒழி, உறு என்னும் சொற்கள் ஆக, ஒழிக, உற்ற எனவிதி யீறாக நின்றனவன்றி மக என்பது போல இயல்பீற்றன அல்ல. ஆதலின் இவை புணர்ச்சி விகாரமெனப்படா. இத்தகையன செய்யுள் விகாரமாம் ஆதலின் அவர் கருத்துப் பொருந்தாமையறிக. |