சூ. 130 :

மென்மையும் இடைமையும் வரூஉங் காலை

இன்மை வேண்டும் என்மனார் புலவர்

(28)
 
க-து:

இதுவுமது.
 

பொருள்:மெல்லெழுத்தும்   இடையெழுத்தும்   முதலாகி வருமிடத்து
மேற்கூறிய அம்முச்சாரியையது மகரஒற்று இல்லையாதல்  வேண்டுமென்பார்
புலவர்.
 

எ-டு:புளியஞெரி,   புளியநுனி,   புளியமுரி  எனவும், புளியயாக்கை,
புளியவட்டு   எனவும்   வரும்.  (யாக்கை = கயிறு)  உரையிற்  கோடலாற்
புளியவிலை என உயிர்வருங்காற் கெடுதலும் கொள்க என்பார் உரையாளர்.
உயிர்வரின் புளியிலை-எனச் சாரியையின்றியமையும் என்க.புளிங்கறி என்பது
மரூஉ முடிபாகும்.