அவற்றுள்
கரமும் கானும் நெட்டெழுத் திலவே
மேற்கூறியவற்றுள் கரமும் கானும் பயிலுமாறு கூறுகின்றது.
பொருள் :மேற்கூறிய மூன்றனுள் கரம்,கான் என்னும் இரு சாரியையும்நெட்டெழுத்திற்கு உரியவாதலில்லை. எனவே காரம்நெட்டெழுத்திற்குரியதென்றவாறாம்.
எ-டு:ஆகாரம், ஈகாரம், ஐகாரம், ஒளகாரம் எனவரும். இவ்வாறுஎதிர்மறுத்துக்கூறியதன் பயன், உயிர்மெய் நெட்டெழுத்து, யாதொருசாரியையும் பெறாதென்பதும், பெறநேரின் ககர ஆகாரம், மகர ஐகாரம் எனவேற்றுமை நயம்பட இருசாரியை பெறும் என்பதும் உணர்த்துதலாம்.