சூ. 136 :

வரன்முறை மூன்றும் குற்றெழுத் துடைய

(34)
 
க-து:

மூன்று சாரியைகளும் பயிலுமிடம் கூறுகின்றது.
 

பொருள் :வரலாற்று  முறைமையான்  முற்கூறிய சாரியை மூன்றையும்
குற்றெழுத்துக்கள் உடையனவாகும்.
 

எ-டு:அகரம், அகாரம், அஃகான் எனவும் ககரம், மகாரம்,   றஃகான்
எனவும் வரும்.
 

‘‘வரன்முறை’’என்றதனான் கான் சாரியை வருங்கால் இடையே ஆய்தம்
செய்யுள் விகாரமாக வருதல் கொள்க. ககரம் என்புழி  உயிர்  மெய்யாயின்
கரம் சாரியையாம். மெய்யாயின்  அம்மெய்யின்  சாரியையாகிய அகரத்தின்
சாரியையாம்.