சூ. 139 : | மெய்உயிர் நீங்கின் தன்னுரு வாகும் |
(37) |
க-து: | மேற்கூறிய புணர்மொழிகள் பிரிந்து நின்றவழி நிலைமொழியீறு எய்தும் தன்மை கூறுகின்றது. |
பொருள்: வருமொழி உயிர் சிவணுதற்பொருட்டுப் புள்ளியியல்பு கெட்டு மெய்யாகி நின்ற எழுத்துத் தன்னை ஊர்ந்த உயிர் பிரிந்த வழி (நிலைமொழிப்பொருள் சிதையாவாறு) தனது முன்னைய நிலையாகிய புள்ளி உருவாகி நிற்கும். |
இவ்விரு சூத்திரங்களையும் வரி வடிவு நோக்கி உரைகண்ட உரையாசிரியன்மார் கருத்து, இந்நூல் நெறிக்கும் மொழியியலுக்கும் பொருந்தாமை நூன்மரபு உரையுள் விளக்கப்பட்டது. |
உயிர்மயங்கியலுள்ளும் புள்ளிமயங்கியலுள்ளும் ஓரெழுத்தாகிய உயிர்மெய்யெழுத்தினை ஒலிக்கூறு பற்றி மெய்யும் உயிருமாகப் பிரித்துப் புணர்ச்சி விதி கூறுதற்கு இவ்விரண்டு நூற்பாக்களும் கருவியாகும். உயிர்மெய்யெழுத்தின்கண் மெய்யெழுத்து மாத்திரையிழந்து நிற்றற்கும் இச்சூத்திரங்களே விதியாகும். |