சூ. 146 : | ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் |
| வினையோ ரனைய என்மனார் புலவர் |
(4) |
க-து: | வருமொழி யகரத்திற்குரியதொரு தன்மை கூறுகின்றது. |
பொருள்: மேற்கூறியவற்றுள் ணகரமும் னகரமும் ஈறாய் நின்றவழி, யாவென் எழுத்தும், ஞாவென் எழுத்தும் வருமொழி வினைச்சொல்லின் முதலாகவரின் அவை பொருளான் ஒத்த தன்மைய என்று கூறுவர் புலவர். |
இதன் கருத்தாவது: ணகர னகர ஈறுகளின் முன் யகர முதன் மொழி வினையாகவரின் ஞகரமாகத் திரிந்து உறழும் என்பதாகும். ஞான்றான் என்பது யான்றான் எனவாராமையின் உறழ்தல் யகரத்திற்குரியதென்பது உய்த்துணரப்படும். |
எ-டு: மண்யாத்தார் - பொன்யாத்தார் என்பவை, மண்ஞாத்தார் பொன்ஞாத்தார் எனவும் வரும். |
பிறப்பிடம் ஒன்றற்கொன்று அண்மைத்தாக இருத்தலும் ஆவொடு வருதலும் இம்மயக்கத்திற்குக் காரணமாம். இவ்வுறழ்ச்சி விதியைச் சூத்திரயாப்பின் சதுரப்பாடு தோன்றப் போலி கூறுவார் போல யாத்த நயத்தினை ஓர்க. |