சூ. 149 :

லனவென வரூஉம் புள்ளி முன்னர்த்

தந எனவரின் றனவா கும்மே

(7)
 
க-து:

லகர   னகரங்களின்   முன்  தகர   நகரங்கள்     திரியுமென
வருமொழித்திரிபு கூறுகின்றது.
 

பொருள்:  லகர  ஈறு  னகர  ஈறு   எனவரும் புள்ளியீறுகளின் முன்
தகரமுதல் நகர முதல் எனவரும் உயிர்மெய்கள்வரின் அவை முறையே றகர
னகர உயிர்மெய்யாகத்  திரியும்.   நிலைமொழித்திரிபு  புள்ளிமயங்கியலுள்
பெறப்படும்.
 

எ-டு:  கஃறீது,   சொற்றிகழும்,    சொன்னன்று  எனவும்  பொன்றீது,
பொன்னன்று  எனவும்   வரும்.  இவை  அல்வழி. கற்றீமை, கன்னன்மை,
பொற்றீமை,   பொன்னன்மை   எனவும்  வரும். இவை வேற்றுமை. இவை
பொருள் நோக்கானன்றி மயக்க விதியின்மையான் திரிந்தன என அறிக.இது
வரும் சூத்திரத்திற்கும் ஒக்கும்.