ணகர ளகரங்களில் முன் தகர நகரங்களின் திரிபு கூறுகின்றது.
பொருள்:ணள என்று சொல்லப்பெறும் புள்ளிகளின் முன் தகரமும் நகரமும் என்னும் உயிர்மெய்வரின் அவை திரிந்து முறையே டகரமும் ணகரமுமாகத் தோன்றும். தகரநகரம் என்பது அதிகாரத்தான் வந்தது.
எ-டு:மண் + தீது = மண்டீது; மண் + நன்று = மண்ணன்று எனவும் முள் + தீது = முஃடீது; புள் + தேம்ப = புட்டேம்ப; முள் + நன்று = முண்ணன்று என அல்வழிக்கண்ணும் மண்டீமை, மண்ணன்மை; முட்டீமை, முண்ணன்மை என வேற்றுமைக்கண்ணும் வரும்.