சூ. 158 : | வேற்றுமை யல்வழி இஐ என்னும் |
| ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலைய |
| அவைதாம், |
| இயல்பா குநவும் வல்லெழுத்து மிகுநவும் |
| உறழ்பா குநவும் என்மனார் புலவர் |
(16) |
க-து: | இகர ஐகார ஈற்று அஃறிணைப் பெயர்களின் அல்வழிப் புணர்ச்சி கூறுகின்றது. இகர ஈற்று உயர்திணைப் பெயர் மேற்கூறப் பெற்றமையான் இச்சூத்திரம் அஃறிணைப் பெயர் பற்றியது என்பது பெறப்படும். |
பொருள்: வேற்றுமைவழியல்லாத அல்வழிப்புணர்ச்சிக்கண் இகர ஐகார ஈற்றுப் பெயர்கள், மூவகை முடிபு நிலைமையை உடைய. அவையாவன வல்லெழுத்துவரின் இயல்பாவனவும் மிகுவனவும் உறழ்வனவும் என்று கூறுவர் புலவர். |
எ-டு: பருத்தி குறிது, சிறிது, தீது, பெரிது எனவும் ஆரை குறிது, சிறிது, தீது, பெரிது எனவும் வரும். இவை இயல்பு. புலிக்கொற்றன், தாமரைக்கண்ணி என வரும். இவை மிகுதி. |
எழுவாய்த்தொடர்கள் பெரும்பான்மையும் இயல்பாயும் சிறுபான்மை உறழ்ந்தும் வரும். உவமத்தொகை,இருபெயரொட்டுப் பண்புத்தொகை இவை பெரும்பான்மையும் மிக்குவரும். |
இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயர் வினைகளைச் சார்ந்து பெயராயும் வினையாயும் நிற்குமாகலானும்,அவை தம்மை உணர்த்தி நின்றவழிப் பெயர்ப்பொருட்டாம் ஆகலானும் இவ்விதி அவற்றிற்கும் ஒக்கும். |
எ-டு: தில்லைச்சொல், மன்னைச்சொல் எனவரும். இவை இடைச் சொற்கள், மிக்குவந்தன. சென்மதிபாக -இவ்இடைச்சொல் இயல்பாக நின்றது. கடிகா - உரிச்சொல். இயல்பாக நின்றது.பணைத்தோள் - உரிச்சொல் மிக்கு நின்றது. பிறவும் இவ்வாறே மரபு நோக்கி அறிந்து கொள்க. |