பொருள்: நெட்டெழுத்தாகிய முதல் எழுத்துக்குறுகி வரும் எனப்பட்ட மொழிகளின் முன்னர் வந்த ஆறாவதன் உருபின் கண்ணும், நான்காவதன் உருபின் கண்ணும், மேல் இரட்டுமெனக் கூறிய குற்றொற்று இரட்டுதல் இல்லை. மற்று, அந்நிலைமொழி யீற்றின்கண்நிற்கும் ஒற்று ஓர் அகர எழுத்தைப் பெற்று நிற்கும். |
எ-டு: எனது, நினது, தனது, எமது, நமது, தமது எனவும் எனக்கு, நினக்கு, தனக்கு, எமக்கு, நமக்கு, தமக்கு எனவும் வரும். தாம், நாம் என்னும் பெயர்களே புணர்மொழிக்கண் தம், நம் எனச் சாரியை இடைச்சொல்லாகி வருதலின் அவற்றிற்கும் இவ்விதி ஒக்கும். எ-டு: எல்லார் தமதும், எல்லார் தமக்கும்; எல்லா நமதும், எல்லா நமக்கும் எனவரும். |