சூ. 164 : | உயிரும் புள்ளியும் இறுதி யாகி |
| அளவும் நிறையும் எண்ணும் சுட்டி |
| உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும் |
| தத்தங் கிளவி தம்மகப் பட்ட |
| முத்தை வரூஉங் காலந் தோன்றின் |
| ஒத்த தென்ப ஏஎன் சாரியை |
(22) |
க-து: | அகத்தோத்தினுள் கூறப்பெற்ற அளவைச் சொற்களின் பெயர்களைத் தொகுத்து அவற்றிற்கு ஆவதொரு விதி கூறுகின்றது. |
பொருள்: உயிரெழுத்தும் புள்ளிஎழுத்தும் இறுதியாகி அளவினையும் நிறையினையும் எண்ணினையும் குறித்து வருவனவாக உள எனச் சொல்லப்பட்ட எல்லா அளவைச் சொற்களும் தத்தமக்கு இனமாய்த் தம்மிற் குறைந்தவையாய் அவ்அளவைச் சொற்கள் தம்முன் வரும் காலந்தோன்றின், இடையே ‘ஏ’ என்னும் சாரியை எழுத்தைப் பெற்றுவருதல் இலக்கணத்திற்கு ஒத்தது எனக் கூறுவர் புலவர். |
‘காலம்’ என்றது கூறுங்காலை, வரூஉங்காலை என்பவை போல இடத்தை உணர்த்தி நின்றது. (இஃதொரு நயம்) |
எ-டு: நாழியேஆழாக்கு, உழக்கேயாழாக்கு, கலனேதூணி, கலனேபதக்கு எனவும் தொடியேகஃசு, கழஞ்சேகுன்றி, கொள்ளேயையவி எனவும், ஒன்றேகால், காலேகாணி, காணியே முந்திரிகை எனவும் முறையே கண்டுகொள்க. |
‘ஒத்தது’ என்றது சாரியை இன்றிக் கூறின் பொருள் கவர்படுமிடத்தாதலின், கவர்பொருள் படாதவழிக் குறுணிநானாழி, ஐந்நாழியுழக்கு, ஒன்றரை எனச்சாரியை இன்றியும் வருமென்க. இதனைப் பின்வரும் நூற்பாவானும் தெரியலாம். |